search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் ஆடை"

    தீபாவளிக்கு பெண்களுக்கு புதிய அபையா ஸ்டைல் சுடிதார் காமீஸ் என்பது வந்துள்ளது. இது பார்க்க அனார்கலி போன்றே இருந்தாலும் அதிலிருந்து மாறுபட்டது என்பதை அணிபவர் மட்டுமே அறியமுடியும்.
    தீபாவளி என்றாலே பெண்களுக்கு என பிரத்யேக ஆடைகள் வெவ்வேறு வேலைப்பாட்டுடன் அறிமுகப்படுத்தப்படும். இந்த தீபாவளிக்கு இந்த டிரஸ் தான் பெண்களின் ஆர்வத்தை தூண்டும் என ஆடைகளை உருவாக்கவே தனிப்பட்ட வடிவமைப்பாளர்கள் கூடுதல் மெனக்கெட்டு வடிவமைக்கின்றனர். அதன் காரணமாக புதிய ஆடைகள் வெளிவரும்போதே அதற்குரிய சிறப்பிடத்தை பிடித்து விடுகின்றன. அந்த வகையில் தீபாவளி பண்டிகைக்கு புதிய அபையா ஸ்டைல் சுடிதார் காமீஸ் என்பது வந்துள்ளது. இது பார்க்க அனார்கலி போன்றே இருந்தாலும் அதிலிருந்து மாறுபட்டது என்பதை அணிபவர் மட்டுமே அறியமுடியும்.

    அபையா ஸ்டைல் சுடிதார் காமீஸ் என்பது முழு நீள உடையாகும். இஸ்லாமிய பெண்கள் அணிகின்ற அபையா என்ற ஆடையை அடிப்படையாக கொண்டு அழகிய வடிவமைப்பு மேம்பாடுகள் செய்யப்பட்டு இந்த சல்வார் காமீஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. அபையா ஆடை என்பது அணிபவரின் முழு உடல் பகுதியை மூடும் அமைப்பில் கை மற்றும் கால்பகுதி மட்டும் தெரியும் வகையில் உள்ள ஆடை. அதிக வெட்டுதல்கள் இன்றி முழு துணி அமைப்பை தான் மாறுபட்ட வகையில் அதிக வேலைப்பாட்டுடன் கூடிய நவநாகரீக ஆடையாக மாற்றியுள்ளனர்.

    தரையில் புரளும் ஆடையின் அமைப்பு இந்திய பெண்கள் அணியும் வகையிலான வடிவில் அதிக வேலைப்பாடு மற்றும் திறன்மிகு கலையம்ச மேம்பாட்டுடன் உருவாகி உள்ளது. பார்த்தவுடன் விரும்பும் வகையில் அபையா ஆடைகள் வண்ண பொலிவும், துணிகளின் நேர்த்தியும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் அணிய ஏற்ற வகையில் உள்ளன.

    அபையா ஸ்டைல் சுடிதாரின் சிறப்புகள்:


    அபையா ஸ்டைல் சுடிதார் என்பது பல்வேறு விதமான துணிரகங்களில் உருவாக்கப்படுகிறது. இதற்கென பாக்ஸ் ஜாக்கெட் மற்றும் நெட் துணிரகங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆடைகள் அனைத்தும் பல பிரிவுகள் உள்ளவாறு அதாவது திருமணம், பார்ட்டி, விழா, பண்டிகை என்பதுடன் முக்கியமான மீட்டிங் போன்றவைகளுக்கு அணிய ஏற்றவாறு தனிப்பட்ட வகையில் உருவாக்கப்படுகிறது.

    சாதாரணமாகவே அபையா ஸ்டைல் சுடிதார் காமீஸ் என்பது அதிகபட்ச வேலைப்பாட்டுடன்தான் உருவாக்கப்படுகிறது. இதன் மேம்பட்ட ஓவிய வேலைப்பாடு என்பது பார்டர், ஸ்லீவ் மற்றும் கழுத்து பகுதிகள் அனைத்திலும் அதிக சிறப்பு தன்மையுடன் நெய்யப்பட்டுள்ளது. அதாவது பாரம்பரிய எம்ப்ராய்டரி கைவினைகளைஞர்கள் கொண்டு பூ வேலைப்பாடு, கட்தானா பணி, ஜரிகை வேலைப்பாடு, கோட்டாபட்டி, தோனி எம்ப்ராய்டரி, காஷிபா, ரேஷம் எம்ப்ராய்டரி மற்றும் கல் பதியப்பட்டது என அதி உண்மையான கலையம்ச பணிகள் தனிநேர்த்தியுடன் செய்யப்படுகின்றது.

    ஆச்சர்யமூட்டும் சில வடிவமைப்புகள்

    அனார்கலியோடு ஒப்பிட்டு குழம்ப கூடாது என்பதற்கு இதில் மாறுபட்ட வடிவமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இதன் முழு கை அமைப்பு என்பது ஒரு சில மாடல்களில் மட்டுமே இருக்கும். மற்றதில் பிற வகை கை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோல் கழுத்து பகுதி பல வித மாடல்களில் திறம்பட வளைவுகளுடன் தைக்கப்பட்டுள்ளது. எடை குறைந்த வகையில் உள்பகுதி லேயர்கள் மெல்லிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    எம்ப்ராய்டரி ஜாக்கெட் அபையா சூட்ஸ்

    ஒற்றை வண்ண பின்னணியில் தங்க நிற கம்பிகள் பின்னப்பட்ட எம்ப்ராய்டரி வேலைப்பாட்டுடன் ஜாக்கெட் அபையா ஸ்டைல் சூட்ஸ் வருகின்றன. முழு உடையில் மார்பு பகுதி, கைப்பகுதி மற்றும் ஆடையின் கீழ்பகுதியில் அடுத்தடுத்தான எம்ப்ராய்டரி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நேவி ப்ளு, மெரூன், பிங்க், சிவப்பு போன்ற பிரகாசமான வண்ணங்களில் இந்த எம்ப்ராய்டரி ஜொலிக்கின்றது. ஆடையின் மார்பு பகுதி ஜொலிக்கும் கவசம் போன்ற அமைப்புடன் பின்னல் செய்யப்பட்டும் அதன் கீழ் பகுதி மலர்கள் உள்ளவாறும் நெய்யப்படுகிறது. கொடிகள், இலைகள் உள்ளவாறும், ஆடையின் கீழ்பகுதி டிரில் அமைப்பில் அடுத்தடுத்தான தோரண அமைப்பு உள்ளவாறு கூடுதல் தரத்துடன் எம்ப்ராய்டரி அமைப்பு செய்யப்பட்டுள்ளது.

    நெட் துணியில் அபையா சூட்ஸ்

    பாலி ஷன்டூன் லைனிங் அமைப்பு என்பது நூல் மற்றும் ஜரிகையில் நெய்யப்பட்டவாறு மேல் கோட் அமைப்புடன் உள்ளது. இதில் மேற்படி அழகை கூடுதல் மேம்படுத்தும் வகையில் நெட் துணியில் துப்பட்டா மற்றும் மேல்சட்டை அமைப்பு கொண்டவாறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சைனீஸ் காலர் அமைப்புடன் மெல்லிய துணியின் மேற்பகுதி, உட்புறபகுதி பாலி ஷன்டூன் துணி அமைப்பு மெல்லிய எடை குறைந்த ஆடைக்கு உத்தரவாதம் தருகிறது. ராயல் கவுன் அமைப்பில் கம்பீர நடையுடன் பவனி வரச்செய்யும் இந்த அபையா ஸ்டைல் ஆடைகள் புதிய திரைப்படங்களில் கதாநாயகிகளின் முக்கிய ஆடையாக உலா வருகிறது. கூடிய விரைவில் அழகிய பெண்களின் அட்டகாசமான ஆடையாக வீதிகளில் அணிந்து செல்லும்போது கண்டு வியந்திடவே செய்வர். 
    பேஷன் உலகில் மினி ஸ்கர்ட்டுக்கு எப்போதுமே நிரந்தரமான ஒரு இடமுண்டு. அதிலும் சில மினி ஸ்கர்ட் வகைகளுக்கு எப்போதுமே பெண்களிடம் வரவேற்பு அதிகம்.
    பேஷன் உலகில் மினி ஸ்கர்ட்டுக்கு எப்போதுமே நிரந்தரமான ஒரு இடமுண்டு. அதிலும் சில மினி ஸ்கர்ட் வகைகளுக்கு எப்போதுமே பெண்களிடம் வரவேற்பு அதிகம். கொஞ்சம் ஒல்லி பெல்லி, அழகிய கால்கள் இருக்கும் பெண் என்றால் யோசிக்காமல் மினி ஸ்கர்ட்டை தேர்வு செய்யலாம்.

    காலம் தாண்டி  மறையாமல் நிற்கும் ஃபேஷன் ட்ரெண்ட்களில் இந்த மினி ஸ்கர்ட்களுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. நமக்கு பொருத்தமான  டாப்களுடன் மேட்ச் செய்து கொண்டால் ஹாட் குயினாக போஸ் கொடுக்கலாம்.

    காக்டெயில் பார்ட்டி, பகல் நேர கொண்டாட்டங்கள் என எல்லாவற்றுக்கும் பொருந்தக்கூடிய வகையிலானது தான் இந்த கிரேப் மினி ஸ்கர்ட்.

    எம்பிராய்டரி ஜாக்குவர்டு ஸ்கர்ட்

    ஸ்கர்ட் முழுவதும் எம்பிராய்டரி செய்யப்பட்ட ஜாக்குவர்டு ஸ்கர்ட் பெண்களுக்கு மிகப் பொருத்தமான தேர்வாக இருக்கும். அதேசமயம் இந்த எம்பிராய்டரி போடப்பட்ட ஸ்கர்ட்டுகளைத் தங்கள் உடல்வாகுக்கு ஏற்றவாறு மிகப் பொருத்தமாகத் தேர்ந்தெடுத்து அணிதல் வேண்டும்.



    ரைப்டு மினி ஸ்கர்ட்

    இந்த ஸ்கர்ட் அணிந்தவுடன் நீங்கள் உங்களுடைய பள்ளிப் பருவத்துக்கே சென்றவிட்டது போல் தோன்றும். இந்த ஸ்கர்ட்டுக்குப் பொருத்தமாக கூல் கிராபிக் டி-சர்ட்டுகளை அணியலாம்.

    ஏ - லைன் ஸ்கர்ட்

    இந்த ஏ - லைன் ஸ்கர்ட்டுகள் 1970 களில் மிக பிரபலமாக இருந்தன. அவை இப்போது மீண்டும் ஃபேஷன் உலகில் காலடி எடுத்து வைத்துள்ளன.

    ஸ்டிரைப்டு ஸ்கர்ட்


    செங்குத்தாக இல்லாமல் கிடைமட்டமான கோடுகள் கொண்ட மினி ஸ்கர்ட்டுகள் மிகச் சிறந்த சாய்ஸ். இந்த ஸ்டைல் பார்ப்பவர்களை உடனே உங்கள் பக்கம் கவர்ந்திழுக்கும்.
    பிராக் தற்போது இளம் பெண்கள் உயரத்திற்கு ஏற்ப வடிவமைப்புகளில் மாற்றம் செய்யப்பட்டு கால்முட்டி வரை நீண்ட குட்டை பிராக் மற்றும் மிக நீளமான பிராக் என்றவாறு மாற்றி உருவாக்கப்பட்டது.
    இளம் பெண்கள் விரும்பி அணிகின்ற ஆடைகளில் பிரபலமான ஒன்று பிராக். பொதுவாக ஆசிய நாடுகள் பலவற்றிலும் பிராக் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் அண்டை நாடுகளிலும் பிராக் மீதான ஈர்ப்பு அதிகமாக உள்ளது. முன்பு மேலை மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பிராக் குழந்தைகளை குட்டி தேவதையாக காண்பிக்க அறிமுகப்படுத்தப்பட்டது.

    பிராக் தற்போது இளம் பெண்கள் உயரத்திற்கு ஏற்ப வடிவமைப்புகளில் மாற்றம் செய்யப்பட்டு கால்முட்டி வரை நீண்ட குட்டை பிராக் மற்றும் மிக நீளமான பிராக் என்றவாறு மாற்றி உருவாக்கப்பட்டது. முன்பு சின்ரெல்லா மற்றும் பார்பி பிராக் தான் மிக பிரபலமானதாக அமைந்தது. தற்போது இந்தியாவில் அனார்கலி அம்பர்ல்லா பிராக் என்ற வகை அதிக பிரபலமான பிராக் வகையாக உள்ளது. புதிய அனார்கலி பிராக் பற்றி அறிந்து கொள்ளலாம்.

    கிழக்கத்திய நாடுகளில் மிக பிரபலமான அம்பர்ல்லா பிராக், அதுபோல் டபுள் பிராக், காலிதார் பிராக், கவுன் ஸ்டைல் பிராக் போன்றவாறு பல வடிவமைப்பு செய்யப்பட்டன. அம்பர்ல்லா பிராக் என்பது இந்தியா முழுவதும் காணப்படும் ஒரு வகை ஆடை. இந்திய வடிவமைப்பாளர்கள் ஒவ்வொரு பிராந்திய மற்றும் நாகரீகத்திற்கு ஏற்ப பல்வேறு வடிவமைப்பு திறனை மேம்படுத்தி உருவாக்கம் செய்தனர். இதனால் அம்பர்ல்லா பிராக் என்பது சாதாரண மாடல் முதல் அதி ஆடம்பரமான மாடல் என்றவாறு பல விற்பனைக்கு வந்தன.

    அனார்கலி அம்பர்லா பிராக்ஸ்

    அம்பர்லா பிராக்ஸ் என்பதை அடிப்படையாக கொண்ட பல ஆடைகள் துணை பிரிவுகளாக உருவாக்கம் பெற்றன. அதில் வடகத்திய ஆடை வகையான அனார்கலி என்பது இணைந்த அம்பர்ல்லா பிராக்ஸ் கூடுதல் கவர்ச்சி மற்றும் மேம்பட்ட எம்பிராயிடரி போன்றவை செய்யப்பட்டவாறு உருவாக்கப்பட்டன. பொதுவாக முன்பு அம்பர்ல்லா பிராக்ஸ் இணையாக பைஜாமா பேண்ட் போன்றவைகளையும் அணிந்து கொள்வது வழக்கமாக உள்ளது.



    குடை போல் விரியும் ஆடை வடிவமைப்பு

    அனார்கலி அம்பர்ல்லா பிராக்களின் அழகே அதில் செய்யப்படும் எம்பிராயிடரி மற்றும் ஜொலிக்கும் பார்டர்கள் தான் கழுத்து மற்றும் மேல் சட்டை பகுதிகளில் அதிகபடியான எம்பிராயிடரி பார்டர்கள் கூடுதல் பொலிவை தர பேன்சி லேஸ்கள் மற்றும் பனாரஸி பார்டர் என பல பொலிவு தன்மைகள் செய்யப்படுகின்றன. அதுபோல் கீழ்புற பகுதி முழுவதும் அதிக விரிவுடன் குடை மாதிரி விரிய ஏற்ற அமைப்பு மற்றும் பெரிய சரிகை பார்டர்கள் கொண்டவாறு அழகிய குடை அமைப்பில் இருக்கின்றன. அனார்கலி ஆடையின் அழகே கைப்பகுதியில் மெல்லிய சல்லடை துணி அமைப்பு இணைந்து இருப்பதுதான் சில மாடல்கள் கைபகுதியில் துணி இன்றியும் காணப்படும்.

    விதவிதமான வண்ண சாயல்களுடன்

    அடர்த்தியான மற்றும் லைட் நிறங்களில் மேற் சட்டை அமைப்பு மற்றும் அதற்கேற்ற நிறத்தில் பேண்ட் போன்றவை இணைந்த ஆடை. இதில் பேண்ட் பகுதிகள் மிக சாதாரணமாகவே இருக்கும். மேல் சட்டை அமைப்பான அனார்கலி அம்பர்ல்லா பிராக்தான் அதின வடிவமைப்பு மற்றும் பொலிவு தன்மை கொண்டதாக உருவாக்கம் செய்யப்படுகின்றன. அதிகமான எம்பிராயிடரி மற்றும் பார்டர்கள் உள்ளவாறு, குறைந்த அளவில் மெல்லிய லேஸ் மற்றும் பூ தையல் போட்ட பார்டர் கொண்ட பிராக்களும் கிடைக்கின்றன.

    விழாக்காலங்கள் மற்றும் பண்டிகைக் காலத்திற்கு என்றால் அதிக ஜொலிப்பும், பளபளப்பும் கொண்ட பிராக் சரியாக இருக்கும். ஜார்ஜெட் பருத்தி, நௌான், டூபியான், பட்டு போன்ற பல துணிவகைகளில் உருவாக்கப்பெறும் பிராக்கள் அதன் வடிவமைப்புக்கு ஏற்ற விலையில் கிடைக்கின்றன. ஆடம்பர தோற்ற மளிக்கும்.கற்கள் பதித்த பார்டர் வைத்த பிராக்கள் அதிக விலை கொண்டவை. சிறு குழந்தை அணிந்த சுழலும், குடை அமைப்பு பிராக்- தற்போது இளம் பெண்கள் மனதை கவரும் வகையில் சில மாற்றம் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. அனார்கலி அம்பர்ல்லா பிராக் என்பது இன்றைய பெண்கள் ஆடையில் புதிய டிரெண்ட்- ஆக விளங்குகிறது. 
    பெண்கள் அணியும் குர்தா அல்லது குர்தி என்பது சுடிதார், ஜீன்ஸ், பேன்ட் என்று எதன் மீதும் போட்டுக் கொள்ளக்கூடிய ஒரு ஆடை. இந்த வருடத்தில் சில புதிய டிசைனர் குர்திகளைப் பற்றி பார்ப்போம்.
    பெண்கள் அணியும் குர்தா அல்லது குர்தி என்பது சுடிதார், ஜீன்ஸ், பேன்ட் என்று எதன் மீதும் போட்டுக் கொள்ளக்கூடிய ஒரு ஆடை. இதன் மாடல்கள் அவ்வப்போது இளம் பெண்களின் ரசனைக்கேற்ப மாறிக் கொண்டே இருக்கும். இந்த வருடத்தில் சில புதிய டிசைனர் குர்திகளைப் பற்றி பார்ப்போம்.

    அம்ப்ரெல்லா கட் டிசைனர் குர்தி

    இந்த டிசைன் பெரும்பாலும் ஜார்ஜட் துணியில், காலர் கழுத்து கொண்ட மாடலாக இருக்கிறது. இக்குர்தி முட்டி வரை நீண்டு அங்கு அரை வட்டமாக குடை போல் வெட்டப்பட்டிருக்கும். இந்த வடிவத்திற்கு பல வித பிரண்ட் கொண்ட துணியே எடுப்பாக இருக்கும். மிக மெல்லிய துணியில் ஆன இக்குர்தி இளம் பெண்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

    கைட் (காற்றாடி) டிசைனர் குர்தி

    இது மிகவும் வித்தியாசமான கோணத்தில் தைக்கப்பட்டிருக்கும் டிசைனாக இருக்கிறது. இந்த குர்தி இடுப்பு வரை சாதாரணமாக வந்து இடுப்பிலிருந்து கீழே வரும் பகுதி முக்கோண வடிவில் இருக்கும் இந்த முக்கோண பகுதி கால் முட்டி வரையோ அல்லது கணுக்கால் வரையிலோ நீண்டிருக்கலாம்.

    ஹை-லோ டிசைனர் குர்தி

    இந்த மாடல் குர்தி முன்புறம் குட்டையாகவும், இருபுறங்களிலும் நீண்டும் பல அடுக்குகளாக இருக்கும். இது நீண்ட அகலமான முழு நீள ஸ்கர்ட் போலவும் முன்புற நடுப்பகுதி மட்டும் குட்டையாகவும் இருக்கும்.

    ட்ரையோ கட் குர்தி

    சிறு குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரையில் பலரையும் கவரும் டிசைனாக இந்த குர்தி இருக்கிறது. உட்புற துணி நீளமாக கால் முட்டி வரையிலோ அல்லது கணுக்கால் வரையிலோ இருக்கும். அதன் மேல் உட்புற துணியின் வண்ணத்திற்கு மாற்றான நிறத்தில் வரும் மேற்புற துணி முன்புறம் ஒரு துண்டாகவும், மற்ற இரு புறமும் இரண்டு துண்டாகவும் பிரிந்து நீண்டிருக்கும். இது பெரும்பாலும் சில்க், சில்க்-காட்டன், ரா-சில்க், டஸ்ஸர் போன்ற துணிகளில் போடும்போது அழகாக இருக்கும்.



    பேட்-விங் டிசைன்

    இது கிட்டத்தட்ட ‘கஃப்தான்’ மாடல் போல் தோன்றும். சிறகை விரித்த வெளவால் போல் தோற்றம் தரும் இந்த டிசைன் அணிந்துக் கொள்ள சவுகரியமாக இருக்கும். மெல்லிய துணிகளில் பல வண்ணங்களும், சிறு பூக்களும் நிறைந்த ஃப்ளோரல் டிசைன் கொண்ட துணிகளில் தைக்கப்படும்போது இந்த குர்தி மிக அழகாக இருக்கும்.

    ஃப்ராக் டிசைன்

    இது சிறு பெண்கள் அணியும் ஃப்ராக் போல தோற்றம் தரும். மேலேயிருந்து இடுப்பு வரையில் உடலோடு ஒட்டியும், அதற்கு கீழே மடிப்புகளுடன் அகன்றும் ஃப்ராக் போல தோற்றம் தரும் இந்த குர்தி. இதற்கு கால்களோடு ஒட்டி இருக்கும் டைட் ஃபிட் பேன்ட் போட்டால் எடுப்பாக இருக்கும்.

    லேபர்ட் டிசைன்

    இது பல அடுக்குகளாக இடுப்பிலிருந்து கால் முட்டி வரையிலோ, கணுக்கால் வரையிலோ நீண்டிருக்கும். இந்த குர்தியை பிரன்ட் எதுவும் இல்லாமல் ப்ளெயின் துணியில் போட்டாலும் கூட அழகாக இருக்கும். மிகவும் தளர்வாக இந்த டிசைன் வயதான பெண்களுக்கும் கூட பொருத்தமாக இருக்கும்.

    விங்ஸ் டிசைன்

    இந்த மாடல் குர்தி இரண்டு துணிகளால் ஆனது. நடுப்பகுதி பூக்கள் அல்லது பிரிண்ட் போட்ட துணியால் தைக்கப்பட்டிருக்கும். உடலின் இருபுறமும் ப்ளென் துணியில், முன்புற துணி அளவிற்கு இடுப்பிற்கு சற்று கீழே வரை நீண்டு அதன் பின்பு அப்படியே நீண்டு கணுக்காலிற்கு சற்று மேலே வரையில் வந்து தொங்கும். முன் மற்றும் பின்புற துணிகள், உடலின் இருபுறமும் இது மாதிரி தொங்கும்போது பார்ப்பதற்கு இறக்கை போல் இருக்கும். இது ஒரு வித்தியாசமான டிசைன் என்று சொல்லலாம். 
    நமக்கும் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் பெரும் ஆபத்தானது என்று அறிந்து பெண்களின் ஆடைக்குறைப்புக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த பெண்கள் முன்வர வேண்டும்.
    மென்மையானதும் கவர்ச்சிகரமானதும் ஆன உடலமைப்பு கொண்ட பெண்கள் அணியும் ஆடைகள் பலவிதமான ஜன்னல்களோடும் உடலோடு இறுக்கமாக ஒட்டியவையாகவும் நீளம் குறைந்தவையாகவும் கைகால்கள் இல்லாதவையாகவும் இருப்பதைக் காண்கிறோம்.

    பெண் என்பவள் பலவீனமானவள், அவளது உடலின் கவர்ச்சி கண்டு ஏதாவது அந்நிய ஆண் ஈர்க்கப்பட்டால் அங்கு அவளது கற்பும் தொடர்ந்து உயிரும் பறிபோக வாய்ப்பு உண்டு என்பதை நாம் அனைவரும் அறிந்தே இருக்கிறோம்.

    அதனால் இந்த விதமான ஆடைகள் பாதுகாப்பு அற்றவை என்பதை நிரூபிக்க சான்றுகள் தேவையில்லை. அன்றாடம் தொடர்ந்து அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களே இதை உறுதிப்படுத்துகின்றன.

    தேசிய குற்றவியல் பதிவகத்தின் தரும் புள்ளிவிவரப்படி நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் 65 பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். (அதாவது ஒவ்வொரு 22 நிமிடங்களுக்கும் ஒரு பெண் வீதம் இதற்கு பலியாகிறார்கள்). இந்த குற்றங்களுக்குப் பின்னால் பல காரணங்கள் இருந்தாலும் பெண்களின் ஆடைக்குறைப்பு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.



    நமது மகளோ அல்லது உடன்பிறந்த சகோதரியோ அல்லது பெற்றெடுத்த தாயோ அல்லது கட்டிய மனைவியோ மேற்கூறப்பட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகக் கூடாது என்பதில் நாம் குறியாக இருக்கிறோம். நமது குடும்ப அமைப்பு சீர்குலையக் கூடாது என்பது நம்மில் ஒவ்வொருவரதும் விருப்பம்

    பொதுவாகவே நமக்கு சொந்தமான ஒரு விலைமதிப்புள்ள ஒரு பொருளையோ அல்லது பணத்தையோ வெளியே எடுத்துச் செல்லவேண்டி வந்தால் அதை பத்திரமாக பொதுமக்கள் பார்வையில் படாமல் இருக்க மறைத்துதான் எடுத்துச் செல்வோம். காரணம் அதைக் கவர்ந்தெடுக்க கள்வர்கள் வெளியே காத்திருக்கிறார்கள் என்பதை நாம் நன்கு உணர்ந்திருக்கிறோம்.

    இங்கு நம் அன்புக்குரியவர்களின் உடலை காட்சிக்கு வைத்து காமுகர்களுக்கு அழைப்பு கொடுப்பதுபோலல்லவா அமைகிறது பெண்களின் ஆடை? இவ்வாறு நம் பணத்தை விட,செல்வத்தை விட விலைமதிக்கமுடியாத நம்மவர்களின் கற்பையும் உயிரையும் துச்சமாகக் கருதச் செய்வது எது?

    இவ்வாறு நமக்கும் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் பெரும் ஆபத்தானது என்று அறிந்து பெண்களின் ஆடைக்குறைப்புக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த பெண்கள் முன்வர வேண்டும். நாகரீகம் என்ற போர்வையில் உடலை காட்டாமல் கௌரவமாக உடை அணிய பெண்கள் முன்வர வேண்டும்.

    அது தான் பெண்களுக்கும், சமுதாயத்திற்கும் பாதுகாப்பானது.
    ×